அதிர்ச்சித் தகவல்! தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 30, 2017

Comments:0

அதிர்ச்சித் தகவல்! தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும்!

வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து விட்டு, வேலைக்காகக் காத்திருப்ப வர்களின் எண்ணிக்கை அடுத்த (2018)ஆண்டில் ஒரு கோடியைத்தாண்டி விடும் என்று தகவல் அறிந்த வட் டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து 'டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில நாளேட்டின் 23.9.2017 தேதிய இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் இளை ஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இன்றைய தேதியில் அரசு வேலைக் காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்கள் 89 லட்சம் பேர்ஆவர். அடுத்த (2018)ஆண்டில் மேலும் 15 லட்சம் பேர் அதிகரிக்கக்கூடும் என்று மிகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் மேலும் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைவான 12 ஆயிரம் முதல் 15,000 வரையிலான நேரடி வேலை வாய்ப்புகளும், ஒரு லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் மாநிலத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதில் வஞ்சகப் புகழ்ச்சியான உண்மை என்னவென்றால் தனியார் துறையில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற் சாலைகள் பிரிவில் வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை இழப்பு களும் அதிகரித்து வருகின்றன என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.ஆனால், அதே நேரத்தில் இது தொடர்பாக உறுதியான புள்ளி விபரங்கள் எதுவும் மாநிலத் தொழி லாளர் மற்றும் தொழில்கள் துறை யிடம் இல்லை என்பதும் ஒப்புக் கொள்ளப்படுகிறது.
அரசுத் துறைப் பணிகள் வெளியாட்கள் (அவுட் சோர்சிங்) மூலம் நிறைவேற்றப்படுவதும், அனைத்து உள்ளாட்சிப் பணி களும் தனியார் மயமாக்கப்படுவதும் இணைந்து, மாநிலத்தில் அரசுத் துறை களில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைக் கவர்ந்து விடு கின்றன. ஆனால், வேலை இல்லாத் திண்டாட்டத்திற்கான மிக முக்கிய மான காரணம் மத்திய அரசின் கொள் கைகளாலும், தொழில்நுட்ப மேம் பாடுகளாலும் தான் உருவாக்கப்படு கின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் நிலவரப்படி, வேலை வாய்ப்பகங் களில் பதிவு செய்து இருந்தவர்கள் 81,30,025 பேர். இவர்களில் வேலை செய்ய தகுதியடைந்த 18 முதல் 57 வயதுக்குள்ளானவர்கள் 61 லட்சம் பேர்.
இவர்களும்பெரும்பாலானவர்கள் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்.மாநில அதிகாரப் பூர்வ வட்டாரங் களின் தகவல்களின்படி, 2016-20-17ஆம் ஆண்டில் 5,802 பேர் மாநில அரசு அலுவலங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் இணைக்கப் பட்டுள்ளார்கள். பல்வேறு தனியார் துறை நிறுவனங்களின் மூலம் பல் வேறு முறைகளில் வேலைவாய்ப்பு நிகழ்ச்சிகளின் மூலம், 20,778 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் உயர் அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கையில் வேலை வாய்ப்பகங்களில் தங்கள் பெயர்களை பதிவு செய்தவர்கள் எல்லோரும் வேலை இல்லாதவர்கள்அல்ல; அவர் களில் 40 சதவிகிதத்திற்கு மேற்பட் டவர்கள் வேலை வாய்ப்பு பெற்றி ருந்தவர்கள் தான். ஆனால் அரசு வேலை பெறுவதற்காக அவர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய் துள்ளனர் என்று கூறியுள்ளார்.
வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய அம்சங்கள் உள்ளன. முத லாவது வேலையில்லா திண்டாட்டம் அரசுப் பதிவேடுகளில் குறைவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டாவது வரி வசூல் செய்யும்டோல் பிளாசாக் கள்,பெட்ரோல் பங்குகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் பணியாற்றும் மிகக்குறைவான சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகின்றனர். வேலை தேடுவோர்எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிடும் என்று மதிப்பிடப்படும் இந்த நேரத்தில் உண்மையில் சரியான வேலைவாய்ப்பு பெறாதவர்களின் எண்ணிக்கை அதை விடவும் மிக அதிகமாக இருக்கும் என்பதை அறிய வேண்டும்.
என்று முதுபெரும் தொழிற்சங்கத் தலைவ ரான சி.அய்.டி.யு.வைச் சேர்ந்த முன் னாள் எம்.எல்.ஏ.வான ஏ.சவுந்தரராசன் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், "இதற் கான முக்கிய காரணம் மத்திய அரசின் கொள்கைகளால்தான் உருவாக்கப்பட் டது. மத்திய அரசு வெளிநாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு ஆதரவு அளித்து சிறிய மற்றும் குறு தொழில்கள் இந்திய மாநிலங்களில் வளராமல் தடுத்து வருகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, இந்த நாள் வரையில், மாநிலஅரசில் 3 லட்சத்துக் கும் மேற்பட்ட பணிகள் காலியாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும் வேலை இல்லாத் திண்டாட்டத்தின் காரணமாக, மக்கள் தொகையில் 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.கல்வியில் தமிழ்நாடு ஒரு முன் னோடி மாநிலம் ஆனால் பட்ட தாரிகளுக்கான அவசியமான திற மையை மேம்படுத்த அதுதவறிவிட்டது. பெரும்பாலான இளம்பட்ட தாரிகள் திறமைகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக தகவல் தொடர்பு திறமை தமிழ் நாட்டில் தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளிடம் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது என்று ஸ்சைலார்க் எச்.ஆர்.
தீர்வுகள் நிறுவனத்தின் இயக்குநர் சுரேசாராஜ் கூறியுள்ளார். மற்றொரு முக்கியமான பிரச்சினையாக தகவல் தொழில் நுட்பம் மற்றும் பி.பி.ஓ. மற்றும் உற்பத்தித் துறை களைப் பாதித்து வருவது பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டுள்ள பிரச் சினையாகும். இது மீண்டும் தனியார் துறை நிறுவனங்களின் எண்ணிக் கையை சென்னை உள்பட அனைத்து தென்னிந்திய நகரங்களிலும் குறைத் துள்ளது என்றும் சுரேசா மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews