14 ஒன்றிய அலுவலகங்களில் கணினி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு அக்.5ம்தேதி கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 30, 2017

Comments:0

14 ஒன்றிய அலுவலகங்களில் கணினி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு அக்.5ம்தேதி கடைசி

திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர் தற்காலிக பணியிடங்களுக்கு வருகிற 5ம்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் ராஜாமணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தொட்டியம், தா.பேட்டை ஆகிய 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் தலா ஒரு கணினி இயக்குபவர் (கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்) வீதம் மொத்தம் 14 கணினி இயக்குபவர்கள் பணியிடங்கள் இனச்சுழற்சி அல்லாமல் நிரப்பப்பட உள்ளதால் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் சத்துணவு பிரிவு அலுவலகத்தில் 5.10.2017 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.kaninikkalvi.blogspot.in
மாதம் ரூ.6 ஆயிரம் மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். இப்பணியிடம், பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானதாகும். ஒரு வருட காலத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும். அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை அனுமதிக்கப்படும். பணி நியமனம் செய்வதற்குரிய அலுவலர் மாவட்ட கலெக்டர் ஆவார். தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூ.20க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்தப்பணி பத்திரம் பெறப்படும்.

தகுதிகள்: பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்எஸ்ஆபீஸ் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடம் இனசுழற்சி பின்பற்றப்படாத தற்காலிக பணியிடம் என்பதால் அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews