டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ (நேர்காணல் அல்லாத பதவி) அடங்கிய 1953 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ம் தேதி அறிவித்தது. தேர்வுக்கு இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று 7.50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வு நடக்கிறது. சென்னையில் அண்ணாநகர், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, திருவொற்றியூர், சைதாப்பேட்டை, திருவான்மியூர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
தேர்வு மையங்களுக்கு பேஜர், செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் மோதிரம் அணிந்து செல்ல கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகம், நோட்ஸ், கைப்பை ஆகியவை எடுத்து செல்லக்கூடாது என்றும் டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி சார்பில் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.