சுயநிதி கல்லூரி பேராசிரியர்களுக்கு Ph.D 'கைடுஷிப்’ (ஆய்வு மாணவர்களுக்கான வழிகாட்டி) வழங்க முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 05, 2017

Comments:0

சுயநிதி கல்லூரி பேராசிரியர்களுக்கு Ph.D 'கைடுஷிப்’ (ஆய்வு மாணவர்களுக்கான வழிகாட்டி) வழங்க முடிவு


‘மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட சுயநிதி கல்லுாரி பேராசிரியர்களுக்கு ’பி.எச்டி., கைடுஷிப்’ (ஆய்வு மாணவர்களுக்கான வழிகாட்டி) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,‘ என துணைவேந்தர் செல்லத்துரை தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இப்பல்கலையில் 50 ஏக்கரில் 3 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதில் அனைத்து நாடுகளின் செல்ல பிராணிகள், பறவைகள், மீன்கள் இடம் பெறும்.

 மாணவர்கள் பார்வையிடலாம்.பல்கலை வளாகத்தில் எட்டு ’போர்வெல்’ அமைக்கப்பட்டு, தண்ணீரில் தன்னிறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் 3 கோடி ரூபாய் செலவு தவிர்க்கப்பட்டுள்ளது.ஏழு ஆண்டுகளுக்கு பின் பல்கலை சார்பில் தமிழில் புலமை பெற்றவர், அறிஞர், சிறந்த படைப்பாளர்களுக்காக ’தமிழ் செம்மல்’ விருது, ’இந்தியன் சைன்ஸ் காங்கிரஸ்’ விருதுகள் இந்தாண்டு வழங்கப்படவுள்ளன. உலகளவில் அறிஞர், விஞ்ஞானி, ஆராய்ச்சியாளரை உறுப்பினர்களாக கொண்ட ’மதுரை காமராஜ் பல்கலை அகடமிக் சைன்ஸ்’ அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. 30 நாட்களில் கைடுஷிப் : தற்போது பி.எச்டி., கைடுஷிப் வழங்குவதில் தேக்கம் நிலவுகிறது.

இனி விண்ணப்பித்த 30 நாட்களில் ’கைடுஷிப்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். யு.ஜி.சி., வழிகாட்டுதலின்படி சுயநிதி கல்லுாரிகளில் தகுதியான பேராசிரியர்களுக்கும் ’கைடுஷிப்’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வு மையங்கள் ஏற்படுத்தவும் அனுமதிக்கப்படும். ஆய்வு மையங்கள் இல்லாத கல்லுாரி பேராசிரியர்களும் ’கைடுஷிப்’ பெற உதவும் வகையில் பல்கலையில் ’காமன் ரிசர்ச் கைடுஷிப் ஸ்கூல்’ ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க முடியும்.

இதுதவிர தற்போது 40 கோடி மதிப்பிலான ஆராய்ச்சி திட்டங்கள் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, என்றார்.ஆக.7ல் குறைதீர் கூட்டம் : இப்பல்கலையில் முதல் முறையாக தொலைநிலை கல்வி சார்பில் மாதம் இருமுறை துணைவேந்தர் தலைமையில் மாணவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கூட்டம் ஆக.,7ல் நடக்கிறது. அனைத்து குறைகளும் இதில் உடனடியாக சரி செய்யப்படும் என, துணைவேந்தர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews