ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 05, 2017

Comments:0

ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்


ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை 1.4.2003க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்த அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கு அமலாக்கிட வேண்டி வலியுறுத்தியும், மாநில அரசின் எட்டாவது ஊதியக் குழுவினை அமல்படுத்துவதற்கு முன்னர் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து அமல்படுத்திட ஜாக்டோ - ஜியோ (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) வலியுறுத்துகிறது.kaninikkalvi.blogspot.in 

ஊதியக்குழு முடிவுகளை அமலாக்குவதற்கு முன்பு இடைக்கால நிவாரணம் அறிவித்திட வேண்டுமென்றும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியத்தினை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும் ஜாக்டோ - ஜியோ (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) போராடி வருகிறது. நியாயமான இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆதரிக்கிறது.

போராடும் ஆசிரியர் - அரசு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, சென்னையில் நடைபெறவுள்ள பேரணிக்கு வருபவர்களை இரவோடு இரவாக வழிமறித்து கைது செய்துள்ளதையும், சென்னைக்கு வர முடியாமல் காவல்துறை தடுத்திருப்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
@கணினிகல்வி
ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews