சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 05, 2017

Comments:0

சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: 10 ஆயிரம் பேர் பங்கேற்பு


புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜேக்டோ- ஜியோ சார்பில் கோட்டை நோக்கி பேரணி அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனால் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று திரண்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதி தராததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக் குழு ஊதியத்தை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

72 சங்கங்களை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். சுமார் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேப்பாக்கத்தில் திரண்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். சென்னை நகருக்குள் போராட்டக்காரர்களின் வாகனம் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.
Kaninikkalvi.blogspot.in 
ஆனாலும் அரசு பஸ், ரெயில், சொந்த வாகனங்களில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஜேக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், கணேசன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை முன்வைத்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு தடைகளை மீறி ஜேக்டோ-ஜியோவின் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 22-ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். அரசு பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்படும்.

அதன்பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைத்து முடிவு ஏற்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். அதற்கான ஆயத்த மாநாடு மாவட்ட தலைநகரங்களில் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.#கணினிகல்வி
போராட்டத்தில் கலந்து கொள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து பஸ், வேன், ரெயில் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் செல்வதற்கு தயாரானார்கள். ஆனால் அவர்களை திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

திருவள்ளூர் துணை சூப்பிரண்டு புகழேந்தி தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் திருமண மண்டபம் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் போலீசார் விடுவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews