அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள, 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பு சேர்க்கைக்கு, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், https://tngasa.in/ என்ற இணையதளத்தில், கடந்த 22ம் தேதி பதிவு துவங்கியது. விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை, 3.65 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிப்பதா அல்லது மாணவர் சேர்க்கை பணிகளை துவங்குவதா என்பது குறித்து, இன்று உயர்கல்வி துறை ஆலோசனை நடத்த உள்ளது.
உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், முதன்மை செயலர் கார்த்திகேயன், கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதன் முடிவில், முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.