10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு மார்ச் 20ல் தொடக்கம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வுகள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் து றை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக ஏப்ரல் மாதம் நடக்க உள்ள பொதுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளில் மேற்கண்ட செய்முறை தேர்வும் நடக்கும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித் தேர்வர்கள், ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி அந்த தேர்வில் தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள், மேற்கண்ட தேதிகளில் நடக்க இருக்கும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்துகொண்டு செய்முறைத் தேர்வு எழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடக்க உள்ள தேதி குறித்தும், குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து தகவல் ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அறிக்கையின் மூலம் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையும் மாவட்ட கல்வி அலுவலர்களையும் தொடர்பு கொண்டு செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.