இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 25, 2023

Comments:0

இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்



இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்

நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவில் பாடங்களை அளிக்கும், 'மணற்கேணி' என்ற செயலி இன்று தமிழ்நாட்டில் (25ம் தேதி) அறிமுகப்படுத்த உள்ளது.அதுவும் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.

நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், இருப்பில் வைக்கவும், வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.

நாட்டிலேயே ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கும் இத்தகைய செயலி இதுவே முதல் முறை.

இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைக்கொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய செயலி வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாளை 25.07.2023, செவ்வாய்க் கிழமை அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் uncco துணை பொதுச்செயலாளர்/நிர்வாக பொதுச்செயலாளர் இப்ராகிம் தயாவ் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று விழாப் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.

இதையும் படிக்க | TNSED Manarkeni Learning App - ன் மாபெரும் தொடக்க விழா - நேரலை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews