Breaking

Friday, August 07, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2026 | School Morning Prayer Activities

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.08.2026

மாணவர்களின் சிந்தனைத் திறனையும், அறிவையும் பெருக்கும் நாளைய காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கான முக்கியத் தகவல்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு.


📖 திருக்குறள் (Thirukkural)

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 47 - தெரிந்து செயல் வகை
குறள் எண்: 467

குறள்:
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்:
செய்யத் தகுந்த செயலையும் வழிகளை நன்றாக எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்து தொடங்கிய பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.


💡 பழமொழி & பொன்மொழி

பழமொழி (Proverb):
Penny wise, pound foolish.
தமிழாக்கம்: சிறியதைக் காக்கப் பெரியதை இழக்காதே.

பொன்மொழி (Quote):
"மழை பொழியும் போது பூமி சிரிக்கிறது."

Thought for the Day:
"Save every drop of rain, and you save the future."


🌱 இரண்டொழுக்க பண்புகள் (Two Good Habits)

  1. நான் எனது வாழ்நாளில் யாருக்கும் எவ்விதத்திலும் தீங்கிழைக்க மாட்டேன்.
  2. என்னால் இயன்ற நன்மையை மற்றவர்களுக்குச் செய்வேன்.

🧠 பொது அறிவு (General Knowledge)

  • 1. பறவைகள் பற்றி படிக்கும் படிப்பு எது?
    விடை: ஆர்னித்தாலஜி (Ornithology).
  • 2. இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
    விடை: டாக்டர். சலீம் அலி.

🔤 ஆங்கிலச் சொற்கள் (English Words)

  • Insightful: Understands deeply (ஆழ்ந்த புரிதல் உடையவர்).
  • Versatile: Multi-Skilled (பல்திறமைசாலி).

🌍 புவியியலும் சுற்றுசூழலும் (Geography & Environment)

உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் முக்கியப் பணிகள்:

  • சாலைகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல்.
  • தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பேணுதல்.
  • மரக்கன்றுகள் நடுதல் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளைப் பராமரித்தல்.
  • அரசு நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல்.

📚 NMMS SAT வினா-விடை

வினா: ஒரு முதிர்ந்த பெண் பட்டுப்பூச்சி சுமார் ______________ முட்டைகள் இடும்.
(1) 600
(2) 500
(3) 5000
(4) 6000

விடை: (2) 500


🗓️ ஆகஸ்ட் 07 - முக்கிய தினங்கள் & நினைவஞ்சலி

1. இரவீந்தரநாத் தாகூர் நினைவுநாள்

இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore: மே 7, 1861 - ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம், இசை மற்றும் கலை வடிவங்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் எழுதிய 'கீதாஞ்சலி' கவிதைத் தொகுப்பிற்காக 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியரும், ஐரோப்பியர் அல்லாத முதல் நபரும் இவரேயாவார்.


2. கலைஞர் மு. கருணாநிதி நினைவுநாள்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi: சூன் 3, 1924 - ஆகஸ்ட் 7, 2018) தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். இவர் தமிழக முதல்வராக 5 முறை (1969, 1971, 1989, 1996, 2006) பதவி வகித்துள்ளார். 1969 முதல் 2018 வரை திமுகவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திரையுலகில் கதை, வசனகர்த்தாவாக முத்திரை பதித்தவர்.

கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு, மாவட்டந்தோறும் அரசு மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அமைத்தார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், இஸ்லாமியர் மற்றும் மலைவாழ் மக்களுக்குச் சமூக இடஒதுக்கீடு வழங்கி, தமிழ்நாட்டை மனித மேம்பாட்டுக் குறியீட்டில் முன்னிலைக்குக் கொண்டு வந்ததில் பெரும் பங்காற்றியவர்.


📖 நீதிநெறிக்கதை

என் உயிரை விட உயர்ந்தது என் தாய்நாடு

அரவிந்த் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரன். எல்லைப் பகுதியில் கடும் பனியிலும் மழையிலும் தன் கடமையைச் செய்து வந்தான். ஒருநாள் இரவு, ஊடுருவ முயன்ற எதிரிகளைத் தன் எச்சரிக்கையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்தினான்.

அன்று அவன் தாயின் பிறந்தநாள் என்றாலும், நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என எண்ணித் தன் ஆசையை ஒதுக்கிவைத்தான். சில நாட்கள் கழித்து விடுமுறையில் வீடு திரும்பியபோது, அவனது தாய், "எங்களை விட இந்த நாட்டை அதிகமாக நேசிக்கிறாயா?" எனக் கேட்டார்.

அதற்கு அரவிந்த், "அம்மா, நீங்கள் எனக்கு உயிர் கொடுத்தீர்கள்; ஆனால் இந்தத் தாய்நாடுதான் அந்த உயிருக்கு அர்த்தம் கொடுத்தது. நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குடும்பமும் அமைதியாக இருக்கும்" என்றான். தாய் பெருமிதத்துடன் அவனது தோளைத் தொட்டுக் பாராட்டினார்.

நீதி: தாய்நாட்டை நேசிப்பதும், அதன் பாதுகாப்பிற்காகத் தன் கடமையை நேர்மையாகச் செய்வதும் ஒவ்வொரு குடிமகனின் உயர்ந்த பொறுப்பாகும்.


📰 இன்றைய செய்திகள் (07.08.2026)

தமிழ் செய்திகள்:

  • 🗒️ கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
  • 🗒️ 'AC' பெட்டிகளில் பயணிக்கும் R.A.C பயணிகளுக்கும் போர்வை, கம்பளி வழங்க ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
  • 🗒️ 11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு மீட்பு நடவடிக்கையில் இலங்கை கடற்படையும் இணைந்து செயல்பட்டுள்ளது.
  • 🏀 கிராண்ட் செஸ் தொடர்: நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டுடன் மோதியதில் பிரக்ஞானந்தா முன்னிலையில் உள்ளார்.

Today's English Headlines:

  • 🗒️ Chief Minister Joseph Vijay has written a letter to the Prime Minister, requesting action to implement the Godavari–Cauvery–Gundar river linking project.
  • 🗒️ The Railway Board has instructed that blankets and bed sheets should also be provided to RAC passengers travelling in AC coaches.
  • 🗒️ The Sri Lankan Navy also joined the rescue operation after an Indian fishing boat carrying 11 fishermen met with an accident.
  • 🏀 Sports News: Grand Chess Tournament - Praggnanandhaa is in the lead after his match against Dutch player Jorden van Foreest.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog