பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு - புதிய உறுப்பினர்கள் விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள்!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ள Member Registration விருப்பத்தைத் தேர்வு செய்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுகட்டமைப்பு நிறைவடைந்த பள்ளிகள் புதிய உறுப்பினர்களின் பதிவினை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் 18.09.2026 (வெள்ளிக்கிழமை) ஆகும்.
EMIS தளத்தில் பதிவு செய்வதற்கான முக்கிய வழிமுறைகள்:
- பள்ளியின் EMIS லாகின் பக்கத்திற்குச் சென்று உள்நுழையவும்.
- SMC பகுதியிலுள்ள Member Registration பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
- புதிய உறுப்பினர்களின் விவரங்கள் மற்றும் சரியான கைப்பேசி எண்களை உள்ளீடு செய்யவும்.
- அனைத்துத் தகவல்களையும் சரிபார்த்து பதிவைச் சமர்ப்பிக்கவும் (Submit).
செயல்முறை காணொளி விளக்கம்:
உறுப்பினர்கள் விவரங்களைப் பதிவு செய்யும் செயல்முறையை நேரடி வீடியோ விளக்கமாகப் பார்க்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்:
CLICK HERE TO செயல்முறை காணொளி
நன்றி!
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.