Breaking

Saturday, June 06, 2026

பிளஸ் 2 பொதுத் தேர்வு - தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

ஜூன் 5: தமிழகத் தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) பிளஸ் 2 பொதுத் தேர்வில் அரசு, அரசு உதவிபெ றும் பள்ளிகளின் தேர்ச்சி விகி தத்தை அதிகரிக்க புதிய செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப் பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பியுள்ள சுற்ற றிக்கை:

2026-2027-ஆம் கல்வியாண் டில் அனைத்து மாவட்டங்களி லும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம், பாடங்களில் பெறும் சராசரி மதிப்பெண் ஆகியவற்றை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக கடந்த கல்வியாண் டின் (2025-2026) தேர்வு முடிவு கள் குறித்து பள்ளி வாரியான மற்றும் பாட வாரியான தகவல் களும், முந்தைய ஆண்டு முடிவு களுடனான ஒப்பீடும் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறைந்த தேர்ச்சி சதவீதம் மற்றும் குறைந்த சராசரி மதிப் பெண்களைக் கொண்ட பள்ளி களின் தேர்ச்சி சதவீதத்தையும் சராசரியையும் மேம்படுத்துவ தில் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை அதிக தேர்ச்சி சத வீதத்தைக் கொண்ட பள்ளிகள் சராசரி மதிப்பெண்களை மேம் படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள் ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வுக் கூட்டங்களை அவ்வப் போது நடத்தலாம். வாய்ப்பி ருந்தால் அந்தக் கூட்டத்தில் பங் கேற்க மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கலாம்.

ஆய்வுக் கூட்டத்துக்கு முன் னரோ அல்லது கூட்டத்தின் போதோ, மாநில, மாவட்ட மற் றும் அந்தந்தப்பள்ளி அறிக்கைக ளின் வண்ண அச்சுப் பிரதிகளை ஒவ்வொரு தலைமை ஆசிரிய ருக்கும் வழங்க வேண்டும். ஒவ் வொரு பள்ளிக்கும் தலைமை ஆசிரியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் என்னென்ன செயல் திட்டங்களை வைத்துள் ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும்.

எளிதாக அச்சிடுவதற்காக அறிக்கைகள் 'பிடிஎஃப்' வடிவத் தில் வழங்கப்படும். விரைவில் 'எக்செல்' வடிவமும் வழங்கப்ப டும். முன்னதாக தேவைப்பட் ល់ helda.s@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கேட்டுப் பெறலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது பிளஸ் 2 பொதுத் தேர்வு - தேர்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை



The Tamil Nadu School Education Department has issued directives to Chief Educational Officers to devise action plans for increasing pass percentages in government and aided schools for the 2026-2027 academic year.

Data from the previous academic year (2025-2026) regarding school-wise pass percentages and average marks is being sent to districts to facilitate this.

Special focus is required to improve the pass percentage and average marks of schools that currently have low performance, while also enhancing the averages of high-performing schools.

Reports will be provided in PDF format for easy printing, with Excel formats to follow, and support can be requested via email.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog