தமிழகம், 5 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணி நீட்டிப்பு
தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிக்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அந்தந்த மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட் டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், குஜராத், மத்திய பிர தேசம், சத்தீஸ்கர், அந்தமான்-நிகோபார் தீவுகள், உத்தர பிர தேச மாநிலத்தில் எஸ்ஐஆர் பணியை நிறைவு செய்வதற் கான கால அவகாசம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணி வியாழக் கிழமை (டிச.11) நிறைவு செய்யப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-இல் வெளியிடப்படும் என அறிவிக் கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகம் மற்றும் குஜராத் மாநி லத்தில் எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணியை நிறைவு செய்வ தற்கான அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், அந்தமான்-நிகோபார் தீவு களில் எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணிக்கான அவகாசம் டிசம்பர் 18-வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 23-இல் வெளியிடப்படும்.
உத்தர பிரதேசத்தில் எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணி டிசம்பர் 26 வரை நீட்டிக்கப்படுகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.
கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி வியா ழக்கிழமையுடன் எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணி நிறைவு பெற்றுவிட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-இல் வெளியிடப்படும்.
தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட பட்டியலில் இருந்து விடுபடக் கூடாது என்பதற்காக, புதிய வாக்காளர்கள் படி வம்-6-ஐ பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம் அல்லது 'இசிஐநெட்' செயலி அல்லது வலைதளம் மூலம் படிவத்தைச் சமர்ப்பிக்க லாம். அவ்வாறு சமர்ப்பிப்பவர்களில் தகுதியுள்ளவர்களின் பெயர்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்படும்; இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு - SIR of Electoral Roll qualifying date - Revised Schedule
தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
*வரும் 14ம் தேதி வரை படிவங்களை தரலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.*
*நீட்டிப்பு*
*▪️. தமிழ்நாட்டில் SIR படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு*
*இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு*
பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11 வரை நீட்டிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு
கூடுதல் அவகாசம்
பூர்த்தி செய்யப்பட்ட SIR படிவங்களை ஒப்படைப்பதற்கான கால அவகாசம்
டிச.11 வரை நீட்டிப்பு.
டிச.4ம் தேதி இறுதி நாளாக முன்பு கூறப்பட்டிருந்தது.
வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு Election Commission of India
Nirvachan Sadan, Ashoka Road, New Delhi-110001
No.23/2025-ERS (Vol.II)
To,
The Chief Electoral Officers, (A&NI, Chhattisgarh, Goa, Gujarat, Kerala, Lakshadweep, Madhya Pradesh, Puducherry, Rajasthan, Tamil Nadu, Uttar Pradesh, West Bengal)
Dated: 30th November, 2025
Sub: SIR of Electoral Roll w.r.t. 01.01.2026 as the qualifying date - Revised Schedule.
Sir/Madam.
I am directed to refer to the Commission's Order No. 23/2025-ERS (Vol.II) dated 27.10.2025 wherein the Commission has ordered Special Intensive Revision (SIR) in the above-mentioned 12 States/UTs. In supersession of the previous order, the Commission has decided to revise the Schedule of ongoing Special Intensive Revision as below:

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.