பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் Plus-2 Public Examination answer sheet correction work begins
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன.
விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.
அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
திருத்துதலின்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கவனத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Search This Blog
Friday, April 04, 2025
Comments:0
Home
Government Public Examination
How can I see my board answer sheet?
How do you evaluate an answer sheet?
public examination
public examination Rank List
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்
Tags
# Government Public Examination
# How can I see my board answer sheet?
# How do you evaluate an answer sheet?
# public examination
# public examination Rank List
public examination Rank List
Labels:
Government Public Examination,
How can I see my board answer sheet?,
How do you evaluate an answer sheet?,
public examination,
public examination Rank List
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84641475
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.