பொதுத் தேர்வில் 'பிட்' அடிக்க உதவி - 2 கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை
கடலுாரில் தனியார் பள்ளி தேர்வு மையத்தில், 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பிட் அடிக்க உதவி செய்த தேர்வு கண்காணிப்பாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் வேறு தேர்வு மையத்திற்கு மாற்றப்பட்டார்.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு கடந்த 28ம் தேதி துவங்கியது, வரும் 15 வரை நடக்கிறது. இந்நிலையில், கடலுார் தனியார் பள்ளி தேர்வு மையம் ஒன்றில், கடந்த 2ம் தேதி நடந்த ஆங்கிலம் மொழித் தேர்வில் மாணவர்களுக்கு பிட் அடிக்க அனுமதிக்கப்பட்டதாக சென்னை கல்வித்துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், சம்மந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தேர்வு அறைகளில் 'பிட்' பேப்பர்கள் கிடந்தது உறுதியானது. பின், தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது, அங்கு 'பிட்' அடிக்க அனுமதிக்கப்பட்டது உறுதியானதால் தேர்வு கட்டுப்பாட்டு முதன்மை கண்காணிப்பாளர் தணிகைவேலை, தேர்வு பணியில் இருந்து அதிரடியாக விடுவித்து உத்தரவிட்டார். மேலும், 'பிட்' அடிக்க உதவிய தேர்வு அறை கண்காணிப்பாளர் ரமேஷ், விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு தேர்வு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட ஆசிரியர்களிடமும் விசாரணை நடக்கிறது.
மாவட்டத்தில் 'பிட்' அடிக்க செய்யும் தனியார் பள்ளிகள் மீதான புகார் குறித்தும் விசாரணை செய்யப்படுவதால், பள்ளி தளாளர்கள் இடையே பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.