அரசு பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திட்டம் அறிமுகம் Physical Education curriculum introduced in government schools
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை பின்பற்றி தமிழக அரசு பள்ளிகளிலும், உடற்கல்விக்கு தனி பாடத்திட்டம், வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
சாதிக்கும் உணர்வு
தமிழக அரசு பள்ளிகளில், 700க்கு கீழ் மாணவர் எண்ணிக்கை இருந்தால், ஒரு உடற்கல்வி ஆசிரியர், 700க்கும் மேல் இருந்தால், இரு உடற்கல்வி ஆசிரியர்கள் என, ஒவ்வொரு பள்ளியிலும் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
உடற்கல்விக்கென, பிரத்யேக பாடத்திட்டம் இதுவரை உருவாக்கப்படவில்லை. தேர்வுகளில், உடற்கல்வி தேர்வு இடம்பெறும் நிலையில், பாடத்திட்டம் இல்லாததால், ஆசிரியர்கள் பொதுவாகவே கற்பித்து வருகின்றனர். இந்நிலையில், வரும் கல்வியாண்டில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதாக, கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிமாநிலங்களில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், உடற்கல்வி பாடம் தனியே பயிற்றுவிக்கப்படுகிறது. இதனால், மாணவர்களிடம் விளையாட்டு போட்டிகளில் சாதிக்கும் உணர்வு ஏற்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளிலும், உடற்கல்வி பாடத்தை கொண்டு வர, உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தினோம். அதை ஏற்று, அரசும் மூன்று குழுக்களை அமைத்தது. அக்குழு உறுப்பினர்கள், மூன்று மாதங்களுக்கு முன் ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, உடற்கல்வி பாடப்புத்தகம், பயிற்றுவிப்பு முறை குறித்து பார்வையிட்டு வந்தனர்.
நடவடிக்கை
குழுவினரின் பரிந்துரையை ஏற்று, நம் மாநிலத்திலும் உடற்கல்வி பாடத்திட்டம் கொண்டுவர, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில், இப்பாடத்திட்டம் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.