Public Examinations, March/April 2025 - Advisory Meeting for All Examining Officers - DGE Proceedings - பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கான அறிவுரைக் கூட்டம் - DGE Proceedings
இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 - அனைத்து ஆய்வு அலுவலர்கள் அறிவுரைக் கூட்டம் கலந்து கொள்வதற்கான அழைப்பு - தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6, இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2025 -அனைத்து ஆய்வு அலுவலர்கள் அறிவுரைக் கூட்டம் தொடர்பாக. கலந்து கொள்வதற்கான அழைப்பு-
மார்ச்/ஏப்ரல் 2025 -ல் நடைபெறவுள்ள இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் முக்கிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்/ பள்ளிக்கல்வித் துறை செயலாளர் அவர்கள் தலைமையில் கூட்டம் 13.02.2025 வியாழக்கிழமை அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நடைபெறவுள்ளது.
நாள் - 13.02.2025
இடம் நேரம் - அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம், கோட்டூர் புரம், சென்னை 600 025.
காலை - 09.00
அரசுப் பொதுத் தேர்வுகளைத் திறம்பட நடத்திட அறிவுரைகள் வழங்குவதற்காக கூட்டப்படும் இக்கூட்டத்தில் மேற்காண் ஆய்வு அலுவலர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.