TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 03, 2025

Comments:0

TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

dinamani%2F2024-06%2F4fd9a1e9-0a11-4fc8-91f7-021307d8b5f2%2Ftnpsc


TNPSC - குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிவற்றை இணையதளத்தில் உள்ளீடு செய்து நுழைச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி முற்பகல் தமிழக அரசில் காலியாக உள்ள 2,540 குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான கொள்குறி வகையிலான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர். இதில் 29 ஆயிரத்து 809 பேர் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றனர்.

அவர்களுக்கு வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி பிற்பகல் முதன்மைத் தேர்வின் தமிழ் தகுதித்தாள் தேர்வும் மற்றும் கொள்குறி வகையில் விடை அளிக்கும் பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் தேர்வு நடைபெறும் எனவும், விரிவான விடை அளிக்கும் வகையிலான பொதுஅறிவுத் தேர்வு பிப்ரவரி 23 ஆம் தேதி முற்பகல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டை பதவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in - இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்(ஓடிஆர்) மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%202%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்களை நிரப்ப பிப்.8 மற்றும் 23ம் தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

TNPSC Group 2 Hall Ticket: குரூப் 2 தேர்வர்களே..

வந்தது முக்கிய அறிவிப்பு. -மிஸ் பண்ணிடாதீங்க! பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள குரூப் 2 மெயின் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதை https://apply.tnpscexams.in/otr?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வர்கள் காணலாம்.

குரூப் 2 முதன்மைத் தேர்வு பொது அறிவு, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துக்கான தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதே நாளில் கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வும் நடக்கிறது.

அதேபோல, விவரித்து எழுதும் வகையிலான இரண்டாம் தாள் தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி நடக்க உள்ளது.

இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘’எண்‌: ௦8,2024, நாள்‌ 20.06.2024.ன்‌ வாயிலாக ஒருங்கிணைந்த சூடிமைப்‌ பணிகள்‌ குரூப்- 2 (குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகள்‌) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை தேர்வு 14.09.2024 முற்பகல்‌ நடைபெற்றது.

தேர்வு தேதிகள் என்ன?

தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை எண்‌:௦8.,2024) நாள்‌ 19:12.2024-ன்‌ படி ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌ தேர்வு-2 (குரூப் 2 மற்றும்‌ 2ஏ பணிகள்‌) முதன்மைத்‌ தேர்வு தாள்‌ - 1] பொதுஅறிவு மற்றும்‌ பொது திறனறிவு மனக்கணக்கு நுண்ணறிவு மற்றும்‌ மொழி (பொதுத்தமிழ்‌ அல்லது பொது ஆங்கிலம்‌) கொள்குறி வகை தேர்வு ௦8.02.2025 முற்பகலில்‌ நடைபெற உள்ளது. அதேபோல தாள்‌ - 1 தமிழ்மொழி தகுதித்‌ தேர்வு 08.02.2025 பிற்பகல்‌ மற்றும்‌ குரூப் Il பொதுஅறிவு தாள்‌ - II (Descriptive) 23.02.2025 முற்பகலில்‌ நடைபெற உள்ளது.

தேர்வாணையத்தின்‌ இணையதளத்தில் வெளியீடு

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட நுழைவு சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம்‌ செய்யப்பட்‌டுள்ளது.

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

விண்ணப்பதாரர்கள்‌ மேலே குறிப்பிட்ட இணைய தளத்தை க்ளிக் செய்யவும்.

தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84559933