TNPSC குரூப் 4 தேர்வு... யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ... கட் -ஆப் எவ்வளவு இருக்கும் தெரியுமா..? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2024

Comments:0

TNPSC குரூப் 4 தேர்வு... யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ... கட் -ஆப் எவ்வளவு இருக்கும் தெரியுமா..?



TNPSC Group 4 exam... who has more chances to win... do you know how much will be the cut-off..? - TNPSC குரூப் 4 தேர்வு... யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் ... கட் -ஆப் எவ்வளவு இருக்கும் தெரியுமா..?

For TNPSC Group 4, candidates need to secure at least 90 marks out of 300 to qualify for further stages. The cut-off marks vary for different categories and posts within the exam.

TSPSC Group 4 Cut Off Marks 2024

Category TSPSC Group 4 Cut off Marks 2024

General/UR 150-160 Marks

OBC 140-150 Marks

Scheduled Caste 120-130 Marks

Scheduled Tribes 120-130 Marks

TNPSC group 4 exam | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வினாத்தாளின் பகுப்பாய்வு மற்றும் தோராயமாக கட் ஆப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிட்டது. 6244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.

“கடந்த வருடங்களுடைய வினாத்தாளை விட இந்த வருடம் அவ்வளவு சுலபமாக இல்லை எனவும், தமிழைப் பொறுத்தவரை 88லிருந்து 92 வரை மதிப்பெண் எளிதில் பெற முடியும். 95 பெரும் பட்சத்தில் அது நல்ல மதிப்பெண் ஆகவே அமையும் என தனியார் அகாடமி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார். தமிழைப் பொறுத்தவரை இலக்கணத்தில் புதிதாக சில கேள்விகள் இந்த ஆண்டு கேட்கப்பட்டிருந்தது.

இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.

இதில் 20 கேள்விகள் அனைவராலும் பதிலளிக்க கூடியதாக இருந்தது. சில கேள்விகள் நேரம் செலவு செய்து எழுத கூடியதாக இருந்ததாக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார். பொது அறிவை பொருத்தவரை சுலபமாக இருந்தாலும், ஒரு பத்து கேள்விகள் தரமாக கேட்கப்பட்டிருந்தது. விடை அளிப்பதற்கு சற்று சிரமமாக இருந்திருக்க கூடும்.

தற்போதைய நிகழ்வை பொருத்த கேள்விகள் டிஎன்பிசி தரத்தை தாண்டி எஸ் எஸ் சி போன்ற மத்திய அரசு தேர்வில் காண தரத்தில் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நாட்டு நடப்புகளையும், செய்தித்தாள் வாசித்தல் பழக்கம் இருப்பவர்களும் இதனை எளிதில் பதிலளிக்க முடியும் எனரமேஷ் தெரிவித்தார்.

170 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் நிச்சயம் தேர்வில் வெற்றி வாய்ப்பை தரும் என ரமேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews