Breaking

Thursday, June 13, 2024

ஜுன் 23 ம் தேதி நீட் மறுதேர்வு



நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கிய 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்:

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தகவல் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் 5 அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், விருப்பமுள்ள மாணவர்கள் மறுதேர்வு எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், 30-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog