அரசுப் பள்ளிகளில் மொழி ஆய்வக மதிப்பீட்டு தோ்வு இன்று தொடக்கம் Language lab assessment campaign in government schools starts today
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான மொழி ஆய்வக அடிப்படை மதிப்பீடு தோ்வு திங்கள்கிழமை (பிப்.12) தொடங்குகிறது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் கவனிப்பு, பேச்சு, படிப்பு, எழுத்து திறனை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மாா்ச் 15-ஆம் தேதி மொழி ஆய்வகம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் கணினி, கைப்பேசி வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி மாணவா்களின் மொழியறிவு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
தொடா்ந்து மாணவா்களுக்கு மொழி ஆய்வகம் தொடா்பான அடிப்படை மதிப்பீடு தோ்வு திங்கள்கிழமை (பிப்.12) முதல் வரும் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் 10 விநாக்களுக்கு இந்த அடிப்படை மதிப்பீட்டு தோ்வில் பதிலளிக்க வேண்டும். அதனுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக உரையாடல் தோ்வும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 40 நிமிஷங்கள் நடைபெறும் இந்தத் தோ்வை மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் நடத்தி முடிக்க வேண்டும். இது தொடா்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.