இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 01, 2024

Comments:0

இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்கள்..!

%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..!


இடைக்கால பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்கள்..!

பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

இது இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். 

இந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் ஆறாவது நிதி அறிக்கையாகும்.  மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய உள்ளது. 

நிதியமைச்சர் தாக்கல் செய்ய இடைக்கால நிதியறிக்கையில், மகளிருக்கு ஒதுகீடு செய்யப்பட்டுள்ள திட்டங்களை அவர் தெரிவித்தார். அதில்,  பெண்கள் உயர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 

தொழில்கள் தொடங்க பெண்களுக்கு ரூ.30 கோடி முத்ரா திட்டத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

முத்தலாக் தடை, வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களால் மகளிருக்கு பலன் கிடைத்துள்ளது.

 மகளிர் இட ஒதுக்கீடு, முத்தலாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றிதாக அவர் தெரிவித்தார்.  மேலும், 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 19 எய்ம்ஸ், 390 பல்கலைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2047-க்குள் நனவாகும்.

நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற அடுத்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

இது இடைக்கால பட்ஜெட் என்பதால் இதில் அனைத்தையும் அறிவிக்க முடியாது. அடுத்த அரசு ஆட்சிக்கு வரும் வரை நாட்டை நடத்த இடைக்கால பட்ஜெட் உதவும்.

தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் ழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews