தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி? A-Z தகவல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 12, 2024

Comments:0

தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி? A-Z தகவல்கள்



தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம் - எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி? A-Z தகவல்கள் Gold bond sale begins today - where to buy? How much interest? A-Z information

*தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் தொடக்கம்*

*"தங்கப் பத்திரம் பிப்.12 வெளியீடு!"* *- எங்கு வாங்கலாம்? எவ்வளவு வட்டி?*

*A-Z தகவல்கள்!*

தங்கப் பத்திரம் வெளியீடு! திருவிழா, பண்டிகை, கல்யாணம், காதுகுத்து...

இப்படி இந்தியாவில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தங்கம் இல்லாமல் இருக்கவே இருக்காது. பொதுவாகவே, இந்தியர்களுக்கு தங்கம் மீது மோகம் அதிகம்.

அதனால் கையில் கொஞ்சம் காசு கிடைத்து விட்டாலே தங்கம் வாங்க வண்டியைக் கட்டிவிடுவார்கள்.

இப்படி ஆசை ஆசையாக இந்தியர்கள் வாங்கிக் குவிக்கும் தங்கத்துக்கு பாதுகாப்பு உள்ளதா, வாங்கிய விலைக்கே விற்க முடியுமா என்று கேட்டால், இல்லவே இல்லை' என்பதுதான் உண்மை.

அதனால் காசு இருக்கு... தங்கம் வாங்கணும்... ஆனா, நஷ்டம் இருக்கக் கூடாது' என்பவர்களுக்கும், தங்கம் வேணும்... ஆனா, பாதுகாப்பானதாக வேண்டும்' என்பவர்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரம்' ஒரு நல்ல நண்பன். இதில் நீங்கள் முதலீடு செய்வதற்கான சிறந்த நேரமும் வந்துவிட்டது.

2023-24 நிதியாண்டின் தங்கப் பத்திரத்தின் நான்காவது சீரிஸ், இன்று (பிப்ரவரி 12, திங்கள்கிழமை) வெளியாகி, பிப்ரவரி 16, 2024 வரை விற்பனையாகும்.

இந்த ஐந்து நாட்களுக்குள் மக்கள் கட்டும் தொகைக்கான பத்திரங்கள் பிப்ரவரி 21, 2024 அன்று ஒதுக்கப்படும். இந்தத் தங்கப் பத்திரம் ஒரு கிராமுக்கு ரூ.6,263-க்கு விற்பனை ஆக உள்ளது.

*யார் வாங்கலாம்?*

இந்த தங்கப் பத்திரங்களை தனி நபர்கள், HUFs, அறக்கட்டளைகள், பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் வாங்கிக்கொள்ள முடியும்.

*எங்கு வாங்கலாம்?*

தங்கப் பத்திரங்களை வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், அஞ்சலகங்கள், பங்குச் சந்தைகள் மற்றும் ஆன்லைனிலும் வாங்க முடியும்.

ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி தரப்படுகிறது. *ஒருவர் எவ்வளவு கிராம் வாங்க முடியும்?*

ஒருவர் 4,000 கிராம் அல்லது 4 கிலோ கிராம் வரை தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

அறக்கட்டளைகள் மாதிரியான அமைப்புகள் ஒரு நிதியாண்டில் 20 கிலோ கிராம் வரை தங்கப் பத்திரம் வாங்கலாம்.

*தங்கப் பத்திரம் முதிர்வு காலம் எது?*

பொதுவாக, தங்கப் பத்திரங்களின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

ஆனால், தேவைக்கேற்ப 5 ஆண்டுகளில் இருந்தே வெளியேறிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

அதனால் முதலீடு செய்த 5 ஆண்டுகளில் இருந்து தங்கப் பத்திரங்களை விற்க முடியும்.

முதிர்வு காலம் வரை தங்கப் பத்திரத்தை நாமே வைத்திருந்தால், முதலீடு முதிர்வடையும் காலத்தில் அன்றைக்கு 24 காரட் தங்கத்தின் விலை என்ன விலையோ, அதே விலை பணமாகக் கிடைக்கும்.

இத்துடன் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 2.5% வட்டி கிடைக்கும். இந்த வட்டி தொகை ஆறு மாதத்துக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

*கோல்ட் பாண்டின் தங்கம் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?*

தங்கப் பத்திரங்களின் விலை IBJA-வால் நிர்ணயிக்கப்படும் 999 சுத்தமான தங்கத்தின், கடந்த 3 நாள்களின் சராசரி விலையின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. *தங்கப் பத்திரம் வாங்க பணம் எப்படி செலுத்த வேண்டும்?*

தங்கப் பத்திரம் வாங்க ரூ.20,000 வரை ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகை வங்கி வரைவு டிஜிட்டல் முறை மூலமும் செலுத்த வேண்டும்.

*முதிர்வுத் தொகைக்கான நடைமுறை என்ன?*

முதலீடு, முதிர்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு முதலீட்டாளருக்குத் தகவல் தரப்படும்.

முன்னர் கொடுத்த வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்றவற்றில் மாற்றம் இருந்தால், தொடர்புடைய வங்கி, அஞ்சலகம் முதலானவற்றுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews