*பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் தான் இல்லை அமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வையாவது கொடுத்திருக்கலாமே என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை.*
இது குறித்து ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறியதாவது...
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் போனஸ் வழங்குகிறது.இந்த ஆண்டும் அதற்காக 167 கோடியே 68 இலட்சம் ரூபாய் செலவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.வழக்கம் போலவே இந்த ஆண்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை. நாங்களும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தானே பணிபுரிகின்றோம்,நாங்களும் தமிழர்கள் தானே,எங்களுக்கும் பொங்கல் ஒரு பண்டிகை தானே.இந்நிலையில் நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கிறார்கள். தமிழர் திருநாளாம் நன்னாளில் பக்கத்து வீட்டு பானையில் பொங்கல் பொங்குவதை ஏக்கத்தோடு பார்க்கும் வலி என்று தீருமோ தெரியவில்லை.
குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் அறிவித்த 2500 ரூபாய் ஊதிய உயர்வையாவது டிசம்பர் மாத சம்பளத்தோடு சேர்த்து கொடுத்திருந்தால் எங்கள் வீட்டுப் பானையும் பொங்கியிருக்கும்.240 நாட்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் தான் பொங்கல் போனஸ்க்கு தகுதியானவர்களாம்.நாங்களும் 240 நாட்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறோம் என்று தானே சொல்கிறோம்.அதற்கும் அரசு அனுமதிக்கவில்லை,அதைக் காரணம் காட்டி போனஸும் வழங்கவில்லை என்பது எந்த விதத்தில் நியாயம் எனக் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.