4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 06, 2024

Comments:0

4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

4 மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம் Recruitment camp for 108 ambulance services in 4 districts

தக்கலையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆள்சேர்ப்பு முகாம்

நாளை மறுநாள் நடக்கிறது

குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட் டங்களில் 108 ஆம்புலன்ஸ்களுக்கு 20 மருத்துவ உதவியாளர் ஈ பணியிடங்களும், 10 டிரைவர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடக்கிறது. மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., லைப் சயின்ஸ் போன்றவற்றில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருக்கவேண் டும். மாத ஊதியம் ரூ.16,020. நேர்முகத்தேர்வு அன்று 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஓட்டுனர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்கவேண் டும். மாத ஊதியம் 15,820. நேர்முகத்தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். பணி இடங்களுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய் யப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி அளிக்கப் படும்.

இந்த தகவலை 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் சுனில் தெரிவித்துள்ளார்.

IMG_20240106_115642

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601025