பொதுத் தேர்வுகளில் சாதித்த ஆசிரியர்களை ‛தாராளமா பாராட்டுங்களேன்; நான்கு சுவருக்குள் வேண்டாமே என ஆதங்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 18, 2023

Comments:0

பொதுத் தேர்வுகளில் சாதித்த ஆசிரியர்களை ‛தாராளமா பாராட்டுங்களேன்; நான்கு சுவருக்குள் வேண்டாமே என ஆதங்கம்

‛Generously praise the teachers who have achieved in public examinations; Do not want to stay within four walls - பொதுத் தேர்வுகளில் சாதித்த ஆசிரியர்களை ‛தாராளமா பாராட்டுங்களேன்; நான்கு சுவருக்குள் வேண்டாமே என ஆதங்கம்

பொதுத் தேர்வுகளில் 'சென்டம்' தேர்ச்சி பெற்ற பள்ளிதலைமையாசிரியர்கள், பாடம் வாரியாக மாணவர்களை நுாறுமதிப்பெண் பெற வைத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் நடக்கும் பாராட்டு விழாவை நான்கு சுவற்றுக்குள் நடத்தாமல்வெளிப்படையாக நடத்த வேண்டும்' என தலைமையாசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

இந்தாண்டு பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க சிறப்பு தேர்வுகள் நடத்துவது, சுமாராக படிக்கும் மாணவர்கள், காலாண்டு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் நியமனம் போன்ற நடவடிக்கைகளை சி.இ.ஓ., கார்த்திகா எடுத்து வருகிறார்.

கடந்த பொதுத் தேர்வில் 'சென்டம்' தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள், 'சென்டம்' பெற வைத்த ஆசிரியர்கள் என 3060 பேரை தேர்வு செய்து பாராட்டு விழா நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 21 மேல்நிலை, 40 உயர்நிலை தலைமையாசிரியருக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. இவ்விழா பெயரளவில் நடத்தப்பட்டதாக தலைமையாசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.அவர்கள் கூறியதாவது: சென்டம் தேர்ச்சி பெற்ற தலையைாசிரியரை உற்சாகப்படுத்த பாராட்டு விழா நடக்கிறது. இதற்காக 61 பேர் அழைக்கப்பட்டதில் பலர் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் காலை 10:00 மணிக்கு நடந்த கூகுள் மீட்டிங்கில் அழைப்பு விடுக்கப்பட்டு மதியம் 2:00 மணிக்கு பங்கேற்கும்படி தகவல் அனுப்பினர். சி.இ.ஓ., அலுவலகம் எஸ்.எஸ்.ஏ., புதிய ஹாலில் விழா நடந்தது. இதில் குறிப்பிட்ட ஆசிரியர்களை மட்டுமே அழைத்து இருந்தனர். வேறு யாரும் அழைக்கப்படவில்லை. உரிய முன்னேற்பாடும் இல்லை.

தேர்ச்சி குறைவாக எடுத்த பள்ளி தலைமையாசிரியர்களையும் அழைத்திருந்தால் அவர்களுக்கு 'நாமும் இந்தாண்டு சாதிக்க வேண்டும்' என்ற துாண்டுதல் ஏற்பட்டிருக்கும்.இதேபோலஅரசு உதவிபெறும் பள்ளிகளையும் பாராட்ட வேண்டும். ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா கலெக்டர் தலைமையில் வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews