4 மாவட்டங்களில் தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை.
தேர்வு ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை.
4 மாவட்டங்களில் நடைபெறவிருந்த தேர்வு கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே நாளை(டிச.18) நடைபெறவிருந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று காலை முதலே தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 10 மணிநேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ளது. பல்வேறு வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மாவட்டங்களில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிச. 18 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுகள் ரத்து
தென் தமிழகத்தில் நாளை மற்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் வேறொரு நாளில் நடைபெறும் என்று அந்தந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பானது எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விருதுநகர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நாளை விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு.
நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு
தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- பல்கலை. துணை வேந்தர் சந்திரசேகர் தகவல்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.