கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தீர்மானம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 01, 2023

Comments:0

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் - அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தீர்மானம்

கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் தீர்மானம்

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசி ரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில மையக் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மாநில தலைமை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத்த லைவருமான அமிர்தகுமார் தலைமை வகித்தார். கூட் டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர், தலை மைச் செயலக முன்னாள் தலைவர் பீட்டர் அந்தோ ணிசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி உள்பட பல அரசு ஊழியர் கள்,ஆசிரியர்கள் சங்க நிர் வாகிகள் பங்கேற்றனர். இதில், பழைய பென் ஷன் திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு பணப்ப லனை மீண்டும் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழு 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். எல்லா துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அரசு அலுவலர்கள், ஆசிரியர்களு க்கு பழைய நிலையிலேயே உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு,அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், எம். ஆர்.பி.நர்ஸ், டிரைவர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி பெறுபவர்களை பணி நிரந் தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 12 ஆயிரத்து 526 ஊராட் சிகளில் பணிபுரியும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி வரும் டிசம்பர் 21ம் தேதி மாவட்டம் தோறும் கெலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews