JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 07, 2023

Comments:0

JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு..



JEE முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு..

வரும் ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் முதல்கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களை செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது அதிகாரப்பூர்வ லாக்-இன் ஐடிக்களை வைத்து, விண்ணப்பத்தில் அளித்த தகவல்களை திருத்த வேண்டுமெனில் திருத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்பு டிசம்பர் 8ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், வீட்டு முகவரி உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் மாணவர்கள் திருத்த முடியாது. தேர்வு மையம், தேர்வு தாள் உள்ளிட்ட சில விவரங்களை மட்டும் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ற இணையதள முகவரியில் சென்று மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியது இருந்தால் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜேஇஇ) தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி நிறைவுபெற்றிருக்கிறது. இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) உள்ளிட்டவற்றில் மாணவா் சோ்க்கைக்காக ஜேஇஇ தோ்வை தேசிய தோ்வு முகமை நடத்தி வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு ஜேஇஇ முதன்மைத் தோ்வின் முதல் கட்டத் தோ்வு ஜன. 24 முதல் பிப்.1-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், இரண்டாவது கட்டத் தோ்வு தோ்வு ஏப்.1 முதல் ஏப்.15-ஆம் தேதிவரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினிவழியில் நடைபெறும் இத்தோ்வு முடிவுகள் தோ்வு முடிவுற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் வெளியிடப்படும். மேலும் தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் தோ்வுகள் குறித்த விவரங்களை இணையதளப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews