இக்னோவில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 21, 2023

Comments:0

இக்னோவில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

இக்னோவில் மாணவர் சேர்க்கை.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்பு:

போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,-நர்சிங்,

கால அளவு:

குறைந்தது 3 ஆண்டுகள் - அதிகபட்சம் 6 ஆண்டுகள்.

பயிற்று மொழி:

ஆங்கிலம்.

தகுதிகள்:

பதிவு செய்யப்பட்ட செவிலியராக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அரசின் விதிமுறைப்படி, இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.

இப்படிப்பில் சேர வயதுவரம்பு ஏதும் இல்லை.

படிப்பு:

பேச்சுலர் ஆப் எஜுகேஷன் - பி.எட்., தகுதிகள்:

அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல், கலை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

அல்லது

அறிவியல் மற்றும் கணித பாடங்களுடன் பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு.

வயதுவரம்பு ஏதும் இல்லை.

படிப்பு:

பிஎச்.டி.,தகுதிகள்: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், அதற்கு இணையான தகுதியுடைய படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு. விண்ணப்பிக்கும் முறை: http://ignou.ac.in/ignou/studentzone/adminssionanouncement/1 எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

யு.ஜி.சி.,-நெட் / யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் உரிய தகுதி பெற்றவர்கள் பிஎச்.டி.,

சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31

விபரங்களுக்கு:

www.ignou.ac.in

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews