பள்ளி கல்வி அமைச்சர் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு Minister of School Education conducts surprise inspection of government schools
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில், திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.பெருந்துறை கிழக்கு பள்ளி, மொடக்குறிச்சி மகளிர் பள்ளி, ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு ஆண்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், அலுவலக பணியாளர்களுக்கான கூட்டத்தில், அமைச்சர் மகேஷ் பேசினார். அப்போது, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் பள்ளி இடை நிற்றல் மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இதற்கான விழிப்புணர்வை மாணவ, மாணவிகளிடம், பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.மாவட்ட கல்வி அலுவலர் பதவி (இடைநிலை), மாவட்டத்தில் இரண்டாக இருந்ததை, ஒன்றாக குறைத்து விட்டதால், பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
குறைக்கப்பட்ட பணியிடத்தை மீண்டும் நிரப்ப வேண்டும் என்று, அமைச்சரிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக அமைச்சரின் வருகை ரகசியம் காக்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.