திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ. 15,000 பரிசுத்தொகை - அக். 31-ம் தேதி கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 23, 2023

Comments:0

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ. 15,000 பரிசுத்தொகை - அக். 31-ம் தேதி கடைசி

திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - ரூ. 15,000 பரிசுத்தொகை - அக். 31-ம் தேதி கடைசி


திருக்குறள் முற்றோதலுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ராணிப்பேட்டை ஆட்சியர் தகவல்

உலக பொதுமறை நூல் திருக்குறளில் உள்ள கருத்துக் களை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய் யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வழங்கப் படுகின்றன. இந்த பரிசுத்தொகையானது தற்போது ரூ. 15,000-ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் 2023-2024-ம் ஆண்டுக்கான ராணிப்பேட்டை மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளிகளிலும் (அரசு/தனியார்/நிதியுதவி) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ, மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு, வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரால் (ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (பொ) பரிந்துரைக்கப்படும்). ஏற்கெனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. திருக்குறள் முற்றோதலில் பங்கு பெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக, கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 0416 2256166 (99522-80798) 616 60 660016001160 தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக். 31-ம் தேதிக்குள், 'மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகம், 4-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேலூர் மாவட்டம் 632-009' என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews