தினமலர் வெளியிட்டது பொய் செய்தி - கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை - தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 01, 2023

Comments:0

தினமலர் வெளியிட்டது பொய் செய்தி - கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை - தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால்

IMG_20230801_221630
தினமலர் வெளியிட்டது பொய் செய்தி

கலைஞர் மகளிர் உரிமை தொகை குறித்து அவதூறு பரப்பினால் கடுமையான நடவடிக்கை

கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்குவது குறித்து உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுகின்றன

இது போன்ற பொய்யான தகவல் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

- தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவால்

ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனும் தலா ரூ.1 லட்சம் வசூல் செய்ய மறைமுக உத்தரவா? காவல்துறை மறுப்பு. தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

மகளிர் உரிமைத்தொகை வழங்க மாஸ்டர் பிளான் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்கு மாறானது.

மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை.

இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

IMG_20230801_221650

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84614465