TNUSRB தேர்வில் முறைகேடு - SI செய்த பகீர் செயல்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு, கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வின்போது, காவல் உதவி ஆய்வாளர் சுமன் என்பவரின் மனைவி லாவண்யா என்பவர் தேர்வில் பங்கேற்று எழுதினார். அப்போது, கேள்வித்தாளை செல்போன் மூலம் படம் எடுத்து, வெளியில் அனுப்பி விடையை கேட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் லாவண்யா தேர்வில் காபி அடித்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காபி அடிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து, தேர்வு எழுதிய லாவண்யா, அவரது கணவர் காவல் உதவி ஆய்வாளர் சுமன் மற்றும் அவலூர்பேட்டை காவல் நிலைய உதவி பயிற்சி ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.