திமுக ஆட்சியில்தான் பழைய முறையில் பென்ஷன் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 26, 2023

Comments:0

திமுக ஆட்சியில்தான் பழைய முறையில் பென்ஷன் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுதி

திமுக ஆட்சியில்தான் பழைய முறையில் பென்ஷன் கிடைக்கும் நம்பிக்கை உள்ளது - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உறுதி



இந்த ஆட்சியில்தான் பழைய பென்ஷன் கிடைக்கும். வேறு ஆட்சியில் கிடைக்க வாய்ப்பில்லை. ஜாக்டோ- ஜியோ அமைப்பில் இருந்து ஆசிரியர் சங்கம் வெளியேற வில்லை. அந்த அமைப்பு எப்போதும்போல நீடிக்கிறது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தெரிவித்தார் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பி னர் விடுத்தகோரிக்கையின் பேரில் பள்ளிக் கல்வி இயக் குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப் பன் ஆகியோர் கூட்டமைப் புடன் டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய பேச் சுவார்த்தை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. பிறகு ஆசிரி யர் சங்கங்களின் கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதா வது:

தமிழ்நாட்டில் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி.முது நிலை ஆசிரியர்கள்,தொழிற் கல்வி ஆசிரியர்கள். கணினி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனித் தனிப் பெயர்களில் சங்கம் வைத்து நடத்தி வரு கின்றனர். இவர்களுக்கென துறைரீதியான பிரச்னைகள், தனிப்பட்ட பிரச்னைகள், பொதுப் பிரச்னைகள் என உள்ளன.பொதுப் பிரச்னைக் காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்றி ணைந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை உருவாக்கி பழைய ஓய்வு ஊதிய திட் டம், ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம், ஊதிய முரண்பாடுகள், நிலு வைத்தொகை உள்ளிட்ட 15 விதமான பொதுப்பிரச்னை களைமுன்வைத்து போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அந்தந்ததுறை சார்ந்த கோரிக்கைகள், பிரச் னைகள், தனிப்பட்ட பதவி உயர்வு, ஊதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் குறித்து பேசவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங் கத்தில் இடம்பெற்றுள்ள 22 சங்கங்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் பேச்சு வார்த்தை நடந்தது. கடந்த மாதம் அனைத்து சங்கங்களு டன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கடந்த வாரம் தொடக்க கல்வி ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன் இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலை யில்தான் இந்த ஆசிரியர் முன்னேற்ற சங்கத்துடன் பேச்சுவார்ததை நடந்தது. ஆசிரியர் சங்கங்கள் எப்போதும் ஒன்று போலத்தான் உள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டணியில் அனைத் தும் இடம்பெற்றுள்ளன. தனிப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசத்தான் இந்த கூட்டமைப்பு, சிலர் கூட் மைப்பு பிளவு பட்டதாக கூறுவது தவறு. இன்றைய பேச்சுவார்த்தையில் எங்கள் தரப்பில் 13 கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றில் முக்கியமான கோரிக்கை என்பது பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண் டும் கொண்டு வர வேண் டும் என்பதுதான். இந்த கோரிக்கை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முன்வைக்கப்படும். இதில் சமரசம் என்பது இல்லை. மேலும், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தேர்வு நடத்துவதை ரத்து செய் துவிட்டு, பழைய முறைப் படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கேட் டுள்ளோம். 2004-06 வரை தொகுப்பூதிய நிலுவைத் தொகை, ஊதிய முரண் பாடுகளை களைந்து ஒன் றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளோம். பங்களிப்பு ஓய்வு ஊதி யத்தைரத்து செய்துவிட்டு, பழைய முறைப்படி ஓய்வு ஊதியம் வழங்க வேண் டும் என்பதை வலியுறுத் தியுள்ளோம். இந்த திட் டத்தை இந்த ஆட்சியில் பெற முடியாவிட்டால் வேறு எந்த ஆட்சியிலும் பெற முடியாது. அதனால் எங்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews