கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு; அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 26, 2023

Comments:0

கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு; அரியலூர் மாணவர் ராகுல் காந்த் தரவரிசையில் முதலிடம்

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படும்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இந்த தரவரிசைப்பட்டியல், நாளை காலை 10 மணிக்கு adm.tanuvas.ac.in, tanuvas.ac.in/ என்ற இணையதளங்களில் வெளியாகவுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி - ஏஹெச்) 660 இடங்கள் உள்ளன.

சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.

இதுபோக, தமிழகத்துக்கு 597 இடங்கள் உள்ளன.
CLICK HERE TO DOWNLOAD தரவரிசைப் பட்டியல்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews