தமிழ்நாடு முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 18, 2023

1 Comments

தமிழ்நாடு முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும்

தமிழ்நாடு முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறும்

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் தமிழ்நாடு முழுவதும் 100 தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முதலாவது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 22.07.2023 (சனிக்கிழமை) அன்று சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் காலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற உள்ளது.இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பளிக்கும் முன்னணி நிறுவனங்களுடனான கூட்டம் 17.07.2023 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும் தலைமையேற்று நடத்தினர். இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அரசு இணை செயலாளர், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தொழிலக சுகாதாரத்துறையின் இயக்குநர், ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் MRF Tyres, India Cements, Michelin, ABT Maruthi, Apollo Tyres, Ashok Leyland, Foxconn Technology, Hyundai Motors, Yamaha India, JBM Auto, J.K. Tyres, Mitsuba India, Royal Enfield, Salcomp Technologies, Seyoon Technologies, Tube Products, Wheels India Ltd, Zebronics, Saint-Gobain, Westside, Trent Ltd, India Tata Electronics உள்ளிட்ட 25 முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளும், FICCI, CII, போன்ற தொழில் கூட்டமைப்பு நிறுவனங்களும் கலந்து கொண்டு தங்கள் கூட்டமைப்பின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளனர்இவ்வேலைவாய்ப்பு முகாமில் 300க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு மேற்பட்ட 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர், சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ, தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளனவேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொண்டு வேலையளிப்போர் தகுதியான ஆட்களை தேர்வு செய்யுமாறும் , வேலைதேடும் இளைஞர்கள் https://forms.gle/6zc1DIKgeGzSpETK6Google Link-ல் பதிவு செய்து தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் கொ. வீரராகவ ராவ், தெரிவித்துள்ளார்கள்

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews