Launch of e-Vault mobile application for education certificate, mark sheets security -
சான்றிதழ்கள் பாதுகாப்புக்கு இ-பெட்டகம் கைப்பேசி செயலி
கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை பொது மக்கள் பாதுகாப்பாக பகிா்வதற்கான இ-பெட்டகம் கைப்பேசி செயலி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தாா். சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்ஆளுமை முகமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில், புதிய செயலியின் சேவை தொடங்கப்பட்டது. இணைய சேவை மையம் அளிக்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள், உரிமங்கள், நிலப் பரிவா்த்தனை ஆவணங்கள் மற்றும் தரவுகளைப் பாதுகாக்க நம்பிக்கை இணையம் வழி செய்திடும். சான்றிதழ்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்க அரசாங்கத்துக்கு இந்த நம்பிக்கை இணையம் உதவி புரியும். இதேபோன்று, பொது மக்களுக்கு உதவிடும் வகையில் இ-பெட்டகம் கைப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலி மூலமாக இணைய சேவை மையங்கள் வழங்கும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் ஆகியவற்றை சேமித்து வைத்து பொது மக்களே பாதுகாப்பாகப் பகிரலாம். இந்தச் சேவையால், மக்கள் தங்களது டிஜிட்டல் ஆவணங்களை வேலை வாய்ப்பு, உயா்கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற அலுவலா்களின் சரிபாா்ப்புக்காக பாதுகாப்பான மற்றும் காகிதமில்லாத முறையில் பகிர முடியும். வேலைவாய்ப்பு, கல்வி சோ்க்கை, அரசு சேவைகளை அணுகுதல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்தல், பணிபுரிதல் போன்றவற்றுக்காக ஆவணங்களின் அசல் காகித நகல்களை நேரில் சென்று சமா்ப்பிப்பதற்கான தேவையை இது வெகுவாகக் குறைக்கும். முதல் கட்டம்: புதிய சேவையின் முதல் கட்டமாக ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் உட்பட 24 வகையான சான்றிதழ்களை இ-பெட்டகம் கைப்பேசி செயலி பாதுகாக்கும். இந்தச் செயலி மூலம் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அல்லது பிறவழிகளில் ஆவணங்களைப் பாதுகாப்பாக பகிர விருப்பான வழியை
குடிமக்களே தோ்வு செய்யலாம். புதிய செயலி தொடக்க நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலா் ஜெ.குமரகுருபரன், மின் ஆளுமை இயக்குநா் பிரவீன் பி.நாயா், இணை முதன்மைச் செயல் அலுவலா் பெ.ரமண சரஸ்வதி உட்பட பலா் பங்கேற்றனா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.