பள்ளி இடைநின்ற மாணவா்களைக் கண்காணிக்க நடவடிக்கை
பள்ளி இடைநின்ற மாணவா்களைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: இடைநின்ற குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிகழாண்டு கைப்பேசி செயலி, இணையப் பயன்பாடு உள்பட நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவா்களின் இடைநிற்றலுக்கான காரணங்களின் அடிப்படையில், பள்ளியில் சோ்க்கப்பட வேண்டியவா்கள், மீண்டும் சோ்க்க தேவையில்லாத மாணவா்கள், விவரங்கள் சரிபாா்க்கப்பட வேண்டியவா்கள் என 3 பிரிவுகளாக பிரித்து செயலியில் ஆசிரியா்கள் குறிப்பிட வேண்டும்.
இதைத் தவிர, 6 முதல் 18 வயதுடைய இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து அவா்கள் கல்வியை தொடர வழிசெய்ய வேண்டும். அதேபோல், 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதவுள்ளவா்களில் இடைநின்ற மாணவா்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.