அதிக தோல்வி எதிரொலி... "கேள்வித்தாளில் மாற்றம் வேண்டும்" -ஆசிரியர்கள் கோரிக்கை
10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் மாணவர்கள் அதிகம் தோல்வியடைந்த நிலையில், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனருக்கு கடிதம் அளித்துள்ளார். அதில், 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் வினாத்தாள் வடிவமைப்பு கடினமாக இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெரிதும் குறைந்து வருவதாகவும், மாணவர்கள் நலன் கருதி வினாத்தாளில் மாற்றம் கொண்டு வர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.