சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது!
நாடு முழவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம் ஆகும். மாணவர்கள் தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வை 21.86 லட்சம் மாணவர்கள் எழுதினர். 12 ஆம் வகுப்பைத் தொடர்ந்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து பொதுத் தேர்வெழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 87.33 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 5 சதவீகிதம் குறைவாகும்.
இந்த ஆண்டு முதல் முறையாக, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளின் பட்டியலை வெளியிடாமல் தவிர்த்துவிட்டது சிபிஎஸ்இ நிர்வாகம். அதேவேளையில், நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அதற்கான சான்றிதழ்களை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.
link post pannunga
ReplyDeletehttps://cbseresults.nic.in/
Delete