அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்-பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 01, 2023

Comments:0

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்-பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

mcms.php
அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவி படுகாயம்-பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

சங்கராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மாணவி படுகாயமடைந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மல்லாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று 1ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறையில் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததில் மாணவி சுபிஸ்னாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். வகுப்பறையில் இருந்து மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் வெளியேற்றினர். மாணவி சுபிஸ்னாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். இத்தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் பெற்றோர்களிடம் பேச்சுத்தை நடத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84726085