Breaking

Wednesday, March 01, 2023

ரூ.1,40,000 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் வேலை - விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.3.2023

ரூ.1,40,000 சம்பளத்தில் ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் வேலை

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பொறிளாளர்(சிவில்) 

காலியிடங்கள்:10 (UR-7,EWS-1,SC-2)

வயது வரம்பு: 1.2.2023 தேதியின்படி 32 வயதிற்குள்ளஇருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வழங்கப்படும். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 -1,40,000

கல்விதகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ. 600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.3.2023 

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog