சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு
சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்ற செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன் வெளியிட்ட அறிவிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கான நேர்காணல் டெல்லி, பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் வருகிற 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலையளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com ல் கண்டு பயனடையலாம். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களில் (9566239685, 6379179200, 044-22505886/044-22502267) அறிந்து கொள்ளலாம்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்களோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்த பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ₹35,400 மட்டும் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.