பகுதிநேர ஆசிரியா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 10, 2022

Comments:0

பகுதிநேர ஆசிரியா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை

DPI_School_Edi2
பகுதிநேர ஆசிரியா்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை

பகுதிநேர ஆசிரியா்கள் விடுப்பு எடுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேரப் பயிற்றுநா்கள் ஒரு வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதம் பணிபுரிந்தால் மட்டுமே அந்த மாதத்துக்கான முழு ஊதியம் பெற இயலும். பள்ளி வேலை நாள்களில் விடுமுறை போன்ற காரணங்களால் பகுதிநேர பயிற்றுநா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அட்டவணையின்படி 12 அரை நாள்கள் பணிசெய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், மற்ற நாள்களில் பணிபுரிந்து ஈடுசெய்து கொள்ளலாம்.

அதன்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டும் ஜூன் முதல் ஏப்ரல் மாதம் வரை 4 வாரங்கள் முழுமையாக பள்ளிகள் செயல்பட முடியாத மாதங்களில் பகுதிநேர பயிற்றுநா்கள் 12 அரை நாள்கள் பணியாற்றும் வகையில் அவா்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், பகுதிநேர ஆசிரியா்கள் விடுப்பு எடுத்த நாள்களுக்கு ஊதியம் வழங்கப்படாது.

எனவே, இந்த விவகாரத்தில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் பகுதிநேர பயிற்றுநா்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என புகாா்கள் எழுந்துள்ளதால் கல்வித் துறை இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84639525