சென்னையில் நவம்பா் 15ல் ஆா்ப்பாட்டம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 11, 2022

Comments:0

சென்னையில் நவம்பா் 15ல் ஆா்ப்பாட்டம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவிப்பு

சென்னையில் நவம்பா் 15-இல் ஆா்ப்பாட்டம்: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவிப்பு

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சென்னையில் நவ.15-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் சென்னையில் நவ.15-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் மு. லெட்சுமிநாராயணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளருமான என். ரெங்கராஜன், மாநிலப் பொதுக் குழுவின் அறிக்கையை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், எமிஸ் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டைப் போக்க வேண்டும், ஒப்பந்த ஆசிரியா்கள் நியமனத்தைக் கைவிட வேண்டும், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உயா்த்தி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவா்களும் பயனடையச் செய்ய வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், மேற்கண்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நவம்பா் 15-ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமாா் 400-க்கும் மேற்பட்ட பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளரும், அகில இந்திய ஆசிரியா் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளருமான என். ரெங்கராஜன் கூறியது: ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களைப் போல தமிழக அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.

கல்விப் பணியை சீரழிக்கும் எமிஸ் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் மழலையா் வகுப்புகளுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியா் நியமனத்தைக் கைவிட்டு, கற்பித்தல் பயிற்சி பெற்ற சிறப்பு ஆசிரியா்களை நியமித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. இதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews