'பள்ளிகளில் மழை பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை' - பள்ளிக்கல்வி அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 11, 2022

Comments:0

'பள்ளிகளில் மழை பாதிப்பு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை' - பள்ளிக்கல்வி அமைச்சர்

''மழைக்காலத்தில் பள்ளிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தொடக்க கல்வி துறையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 61 பேர், வட்டார கல்வி அலுவலர் என்ற, பி.இ.ஓ., பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கான பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ., வளாகத்தில் நேற்று நடந்தது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி தலைமையில் நடந்த விழாவில், பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மழைக் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில், பள்ளிகளின் கட்டடங்களை சீரமைக்கவும், இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனே அகற்றவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

எல்.கே.ஜி., வகுப்புகளுக்கான சிறப்பாசிரியர்களின் சம்பள நிர்ணயம் குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும்.

கல்வி, 'டிவி'யில் உபகரணங்கள் வாங்குவதில் முறைகேடு குறித்து உரிய புகார் தரும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மகேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews