1,293 அரசு பள்ளிகளில் ஒரே நாளில் துாய்மைப் பணி - கலெக்டர் ஆய்வு - government schools - Collector survey - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 27, 2022

Comments:0

1,293 அரசு பள்ளிகளில் ஒரே நாளில் துாய்மைப் பணி - கலெக்டர் ஆய்வு - government schools - Collector survey

1,293 அரசு பள்ளிகளில் ஒரே நாளில் துாய்மைப் பணி - கலெக்டர் ஆய்வு - Sanitation work in 1,293 government schools in one day - Collector survey

விழுப்புரம் மாவட்டத்தில் 1,293 அரசு பள்ளிகளில் துாய்மைப் பணி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் உள்ள 1,293 பள்ளிகளிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் துாய்மைப்பணி மேற்கொள்ளும் திட்டம் துவங்கியது.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி, பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் கலெக்டர் மோகன், நேற்று காலை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரே நாளில் துாய்மைப் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. சி.இ.ஓ., மேற்பார்வையில், 7,877 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரோக்கியமான சூழ்நிலையே இந்த துாய்மைப்பணியின் முக்கிய நோக்கம். பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை நாள்தோறும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.

காலை, மாலை இருவேளையும் பிளீச்சிங் பவுடர், லைசால் உள்ளிட்டவை கொண்டு சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த துாய்மைப்பணி இன்று மட்டும் நடைபெறுவது மட்டுமின்றி தினமும் நடைபெறும்.

பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றிணைந்து நாள்தோறும் பள்ளியை துாய்மையாக வைத்துக் கொள்வதற்கான பணியில் ஈடுபட வேண்டும்.

பள்ளிகளில் ஆரோக்கியமான சூழ்நிலை இருந்தால் மட்டுமே மாணவர்கள் எவ்வித நோய் தொற்றுக்கும் ஆளாகாமல் நன்றாக படிக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து துாய்மைப்பணியை மேற்கொண்டு ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்க பாடுபடுவோம்.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews