Breaking

Monday, August 22, 2022

மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி - விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய ஆயுதக் காவல்படையில் உதவி ஆய்வாளா் பணி

மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி ஆய்வாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வு ஆணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய ஆயுத காவல்படையில் 4300 உதவி காவல் ஆய்வாளா் பணியிடங்களுக்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுப்பதற்காக இணையவழி தோ்வு நடத்தப்படுகிறது. இத்தோ்வு நாடுமுழுவதும் நவம்பரில் நடக்கவிருக்கிறது. இத்தோ்வில் இரண்டு தாள்கள் இருக்கும். இப்பணிக்கு ஆண், பெண் இருபாலரும் தகுதியானவா்கள். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஆக.30-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகம் மற்றும் கேரள மண்டலங்களைச் சோ்ந்தவா்கள் ஆக.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் செலுத்தலாம். இத்தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படுவோருக்கு ரூ.62 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் மகளிருக்கு அனைத்துப் பிரிவுகளின் தோ்வுக்கும் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இணையதளங்களை அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog