பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணை: கடந்த 2022ம் ஆண்டு ஜூன் வெளியான அரசு உத்தரவின்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 2022-23ம் ஆண்டின் இறுதி வரையில் தங்கள் பணியை தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிற்பட்டோர் நலத்துறையின் ஆணையர் கடந்த 2022 ஜூலை மாதம் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அரசுப்பணியாளர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.
அதில் 31.5.2020 வரை பணியில் உள்ளவர்கள் ஓய்வு பெறுவதாக இருந்தால் 59 வயதையும் தாண்டி 60 வயது வரை பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆசிரியராக இருந்து கொண்டு விடுதிக் காப்பாளர்களாகவும், ஆசிரியராக இருந்து கொண்டே விடுதியின் பெண் காப்பாளர்களாக இருப்பவர்கள், இடைநிலை, காப்பாளர்கள், இடைநிலை பெண் காப்பாளர்களும் தங்கள் பணியில் இருந்து இடையில் ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டால் அவர்களும் அந்த ஆண்டின் இறுதி வரை பணியாற்றுவதற்கான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதன்படி கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டால் அவர்கள் தங்கள் பணியை அந்த கல்வி ஆண்டின் (2022-23) இறுதி வேலைநாள் வரை பணியாற்றலாம் என்று அரசு ஆணையிடுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.